Trucks

Image
Disclaimer
Disclaimer

இந்தப் பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள தரவு மற்றும் பிற சாராம்சம் சரியானவை மற்றும் முழுமையானவை என்பதை டாடா மோட்டர்ஸ் லிமிடெட் உறுதிப்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது, ஆனால், இந்தப் பிரிவில் உள்ள ஏதேனும் பிழை அல்லது விடுபாடுகளுக்குப் பொறுப்பேற்காது. பிரசுரிக்கப்படும் தகவல் துல்லியமாக இருப்பதற்கும் அவை தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதிலும், நாங்கள் கவனமாகவும் முன்னெச்சரிக்கையாகவும் இருக்கிறோம், ஆனால். அதன் துல்லியத்திற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க மாட்டோம் மற்றும் எந்த நேரத்திலும் அறிவிப்பு இன்றி, தகவலை மாற்றக் கூடும்.

எந்த விதமான, வெளிப்படையான அல்லது மறைமுகமான உத்தரவாதமும் இன்றி இத்தரவை "உள்ளது உள்ளபடியே" வெளியிடுகிறோம். இந்தப் பிரிவில் உள்ள தரவு அல்லது சாராம்சத்தை மறைமுகமாகவோ நேரடியாகவோ உபயோகித்தல் அல்லது இந்தப் பிரிவிற்கு அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது வேறுவிதமாகவோ எழும் எந்த விதமான உரிமைகோரல்கள் அல்லது இழப்புகளுக்கு (சட்டத்தால் தேவைப்படும் அளவு தவிர) டாடா மோட்டர்ஸ் லிமிடெட் பொறுப்பேற்காது.

முக்கிய நிதிசார் புள்ளிவிவரங்கள், இன்டராக்டிவ் சார்ட்டுகள் அல்லது பங்கு விலைகள் மற்றும் வரைபடங்களில் உள்ள தகவல்களை, பங்குகள் அல்லது பிற தயாரிப்புகள் அல்லது சேவைகளில் முதலீடு செய்ய அழைப்பு அல்லது "டாடா மோட்டார்ஸ்" அல்லது வேறு நிறுவனங்களில் ஏதேனும் ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கான அழைப்பு என எடுத்துக் கொள்ள வேண்டாம். இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களைச் சார்ந்து எந்தவோடு முதலீட்டு முடிவும் எடுக்கவேண்டாமெனப் பரிந்துரைக்கப்படுகிறது.

இந்தத் தகவல் சார்ந்து செயல்படுத்துவதற்கு முன்னர், அதை உறுதி செய்துகொள்ளத் தேவையான நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். "டாடா மோட்டார்ஸ்" அல்லது இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு எந்தக் குழும நிறுவனங்களின் கடந்தகாலச் செயற்படுதிறனை அதன் எதிர்காலச் செயல்பாட்டுத் திறனுக்கான வழிகாட்டியாக நம்பக் கூடாது.

பங்குகளின் விலை மற்றும் அவற்றிலிருந்து பெறப்படும் வருமானம் குறையலாம் மற்றும் அதிகரிக்கலாம் மற்றும் முதலீட்டாளர்கள் முதலில் முதலீடு செய்த தொகையைத் திரும்பப் பெற முடியாமலும் போகலாம். பங்கு விலைகள் மற்றும் வரைபடங்களில் உள்ள தகவல்கள் சுமார் 15 நிமிட இடைவெளியில் புதுப்பிக்கப்படுகின்றன.

இந்தப் பிரிவில் உள்ள தகவலின் பகுதிகளின் நகலை, அதனுடன் தொடர்புடைய தனியுரிம அறிவிப்புகள் மற்றும்/அல்லது பொறுப்புத் துறப்புகள் இணைக்கப்படாத நிலையில் நீங்கள் அச்சிட்டு நியாயமான முறையில் உங்கள் சொந்தப் பயன்பாட்டிற்காக உபயோகிக்கலாம். நிறுவனத்தின் நோக்கங்கள், கணிப்புகள், மதிப்பீடுகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை விவரிக்கும் இந்தப் பிரிவில் உள்ள அறிக்கைகள், பொருந்தக்கூடிய பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் அர்த்தத்தில் "முன்னோக்கிப் பார்க்கும் அறிக்கைகளாக" இருக்கலாம்.

வெளிப்படுத்தப்பட்ட அல்லது மறைமுகமானவற்றிலிருந்து உள்ளபடியான முடிவுகள் வேறுபடக் கூடும். நிறுவனத்தின் செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான காரணிகளில், மற்றவையும் சார்ந்து, நிறுவனம் செயல்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் ஏற்படும் தேவை / வழங்கல் மற்றும் விலை நிலைமைகள் சார்ந்து பாதிப்புக்குள்ளாகும் பொருளாதார நிலைமைகள், அரசாங்க விதிமுறைகளில் மாற்றங்கள், வரிச் சட்டங்கள் மற்றும் பிற சட்டங்கள் மற்றும் தற்செயலான காரணிகள் ஆகியவை அடங்கும்.