டாடா மோட்டார்ஸ் வழங்கும் ஈடு இணையில்லா விற்பனைக்குப் பிந்தைய சேவை
பழுது நேரத்தைக் குறைப்பது, சர்வீஸ் செலவைக் குறைப்பது மற்றும் வாடிக்கையாளர்களின் இடர்பாடுகளைத் தீர்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தி அதை முன்னேற்ற தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். சுவிதா சர்வீஸ் வேன்கள், மொபைல் சர்வீஸ் வேன்கள், டீலர் வொர்க்ஷாப்கள் மற்றும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் TASSகள் போன்ற பல்வேறு சலுகைகளை நாங்கள் வழங்குகிறோம்.
தாக்கம் ஏற்படுத்தும் முடிவெடுப்பதோ, எதிர்கால திட்டமிடலோ, அனைத்திற்குமே பொருத்தமான நிகழ்நேரத் தகவல்கள் மிகவும் அவசியம். வலுவான, தரவு சார்ந்த, நிகழ்நேர வணிகத்தை உருவாக்கும் விதத்தில் உங்கள் வணிகத்தின் தேவைகளை பூர்த்தி செய்து உங்கள் வணிகள் வெற்றிகரமாக முன்னேற உதவும் நோக்கில், உள்நாட்டிலேயே உருவான, அதிநவீன இணைக்கப்பட்ட இயங்குதள தொழில்நுட்பத்துடன் டாடா மோட்டார்ஸின் ஃப்ளீட் எட்ஜ் செயலாற்றுகிறது.
1.59L+
மொத்த பயனர்கள்
3.74L+
மொத்த வாகனங்கள்
456M+
பயனர் நிகழ்வுகள்
டாடா மோட்டார்ஸ் லிமிடெட் வழங்கும் AMC சேவை, சுரக்ஷா சேவை என அழைக்கப்படுகிறது. வாகனப் பராமரிப்பு சார்ந்து கவலை கொள்ளாமல் வாடிக்கையாளர்கள் தனது முக்கிய வணிகத்தில் முழுமையாக கவனம் செலுத்துவதை இது உறுதி செய்கிறது. இத்திட்டத்தின் படி பராமரிப்பு சார்ந்த உங்கள் கவலைகளை டாடா மோட்டார்ஸின் நிபுணர்கள் கையாள்வார்கள்.
டாடா மோட்டார்ஸின் வணிக வாகன வாடிக்கையாளர்கள் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தத்தை (AMC) மேற்கொள்ளலாம், இது டாடாவின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் ஸ்டேஷன்கள்(TASS), அதன் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களின் சர்வீஸ் ஸ்டேஷன்கள் மூலம் குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவைகளை வழங்குகிறது.
சர்வீஸ் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இடைவெளியில், டாடா மோட்டார்ஸின் பரிந்துரைப்படி, குறிப்பிட்ட கிலோமீட்டர்கள் இடைவெளியில் மேற்கொள்ளப்படும் திட்டமிடப்பட்ட பராமரிப்பு சேவைகளின் போது இலவச சர்வீஸ் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய அளவிற்கான லேபர், உதிரிபாகங்கள் மற்றும் நுகர்பொருட்களுக்கள் AMC-இல் உள்ளடங்கியுள்ளது.
Tடாடா வாகனங்களுக்கு சில்வர், கோல்டு மற்றும் P2P (பே டு புரோடெக்ட்) போன்ற பல்வேறு AMC திட்டங்கள் உள்ளன. AMC ஒரு பராமரிப்புத் திட்டமாகும் மற்றும் இது எதிர்பாராத பழுதுகளிலிருந்து பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறது அதோடு திட்டமிடப்பட்ட பராமரிப்பு சேவைகள் மூலம் கணிசமான சேமிப்புக்கு வழி வகுக்கிறது.
டாடா மோட்டார்ஸ் டிரக்கை வாங்கும்போது அத் தயாரிப்போடு சர்வீஸ், சாலையோர உதவி, காப்பீடு, விசுவாசம் போன்று பலவற்றை உள்ளடக்கிய சேவைகளின் உலகமும் உடன் கிடைக்கிறது. உங்கள் வாகனத்தைப் பற்றிய கவலைகளை சம்பூர்ணாவிடம் ஒப்படைத்துவிட்டு உங்கள் வணிகத்தில் முழுமையாக கவனம் செலுத்துங்கள்.
சம்பூர்ண சேவா 2.0 முற்றிலும் புதியது மற்றும் மேம்படுத்தப்பட்ட ஒன்று. கடந்த ஆண்டில் எங்கள் மையங்களைப் பார்வையிட்ட 6.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற கருத்துக்களை கவனத்தில் கொண்டு முழுமையான சேவையை உருவாக்க, தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்.
29 மாநிலங்களில் சர்வீஸ் அலுவலகங்கள், 250+ டாடா மோட்டார்ஸ் பொறியாளர்கள், நவீன உபகரணங்கள் & வசதிகள் மற்றும் 24x7 மொபைல் வேன்களை உள்ளடக்கிய 1500 சேனல் பார்ட்னர்களின் வழங்கும் சேவைகளிலிருந்து நீங்கள் பயனடைவீர்கள்.