1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, 822 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துள்ள ஜாம்ஷெட்பூர் யூனிட் டாடா மோட்டர்ஸின் முதல் உற்பத்தி யூனிட் ஆகும். டாடா 697/497 நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் மற்றும் டர்போசார்ஜ்டு என்ஜின்கள் மற்றும் 6பி சீரிஸ் இன்ஜின்கள் இங்கு உள்நாட்டிலேயே இங்கு டாடா கம்மின்ஸால் தயாரிக்கப்படுகின்றன. ஃபிரன்ட் ஸ்டீயர் ஆக்ஸில்கள் – லைவ் மற்றும் நார்மல், ரியர் டிரைவ் ஆக்ஸில்கள் மற்றும் டம்மி/டிரெய்லர் ஆக்ஸில்களை போன்றவை டாடா மோட்டார்ஸின் முழுச் சொந்தமான துணை நிறுவனமான HV ஆக்ஸில்ஸ் லிமிடெட்ஸால் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இது தற்போது டாடா மோட்டார்ஸின் ஜாம்ஷெட்பூர் மற்றும் லக்னோ பிளான்ட்களுக்கு லார்ஜ் பஸ் ஆக்ஸில்களை வழங்கும் ஒரே வசதியாகும். அத்துடன், ஃபிரன்ட் ஆக்ஸில் பீம், ஸ்டப் ஆக்ஸில்கள், ஃபிரன்ட்மற்றும் ரியர் வீல் ஹப்கள், டிஃபெரன்ஷியல், ஆக்ஸில் கியர்கள் (கிரவுன் வீல், பினியன், பெவல் கியர் & ஷாஃப்ட் கியர்), பான்ஜோ ஆக்சில் பீம், ஸ்வில் ஹெட், கான்ஸ்டன்ட் வெலாசிட்டி ஷாப்ட் போன்ற அனைத்து முக்கிய ஆக்ஸில் பாகங்களும் இவ்வசதியில் தயாரிக்கப்படுகிறது. நடுத்தர மற்றும் கனரக வணிக வாகனங்களுக்கான ஆட்டோமோடிவ் டிரான்ஸ்மிஷன், பாகங்கள், கியர்பாக்ஸ்கள் மற்றும் பொறியியல் பயன்பாடுகளின் முன்னணி உற்பத்தியாளராக HV ஆக்ஸில்ஸ் திகழ்கிறது.