Trucks

Image
Disclaimer
PRIVACY POLICY

டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (இனி 'TML' எனக் குறிப்பிடப்படுகிறது) உங்களது தனிப்பட்ட தரவுகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பராமரிபப்தில் உறுதி கொண்டுள்ளது. உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்குகையில் உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இது சார்ந்து நாங்கள் எங்களது வணிகச் செயல்முறைகளில் சிறப்புக் கவனம் செலுத்துகிறோம். சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவை நாங்கள் பொருந்தக்கூடிய சட்ட விதிகளின்படி செயலாக்குகிறோம்.

எங்களால் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவின் தன்மை, அத்தகைய தரவைச் சேகரிப்பதன் நோக்கம் மற்றும் அதன் பயன்பாடு, பின்னர் அத்தகைய தரவைச் செயலாக்குதல் மற்றும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட தனிப்பட்ட தரவு தொடர்பான உங்கள் உரிமைகள் ஆகியவற்றை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவதே இந்தத் தனியுரிமைக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும். உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பது தொடர்பான உங்கள் உரிமைகளை இந்தத் தனியுரிமைக் கொள்கை வழியமைக்கிறது. உங்களைப் பற்றி TML சேகரிக்கும் தகவல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, பராமரிக்கப்படுகிறது, பகிரப்படுகிறது, பாதுகாக்கப்படுகிறது மற்றும் அதை நீங்கள் எவ்வாறு புதுப்பிக்கலாம் என்பதையும் இத்தனியுரிமைக் கொள்கை விவரிக்கிறது. ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியிலிருந்து (EEA) மின்னணு அல்லது எழுத்து மூலம் உட்பட எந்த வடிவத்திலும் TML பெற்ற அனைத்துத் தனிப்பட்ட தரவுகளுக்கும் இது பொருந்தும். கீழே இடுகையிடப்பட்ட தேதியில் இது நடைமுறைக்கு வரும் மற்றும் நடைமுறைக்கு வரும் தேதிக்குப் பிறகு உங்கள் தகவலை நாங்கள் பயன்படுத்தும் தன்மைக்கு இது பொருந்தும்.

இந்தத் தனியுரிமைக் கொள்கையில் வழங்கப்பட்டுள்ளதைத் தவிர மற்றபடி, உங்கள் தனிப்பட்ட அடையாளத்தைக் குறிப்பிடாமல் எங்கள் இணையதளத்தை நீங்கள் பார்வையிடலாம்/பயன்படுத்தலாம். உங்களை அடையாளப்படுத்தவேண்டிய அவசியமின்றி நீங்கள் எங்கள் இணையதளத்தைப் பயன்படுத்துவதற்குச் சட்டபூர்வமான மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு தேவையான வசதியை TML வழங்குகிறது. இணையதளத்திள் நீங்கள் கோரும் தயாரிப்புகள், சேவைகள் அல்லது விவரங்கள் சார்ந்து சிறந்த தகவலை வழங்கி உங்கள் தேவைகளைத் திறம்படப் பூர்த்தி செய்வதற்கு, வலைதளத்தின் சில பிரிவுகளில் உங்கள் தனிப்பட்ட தரவு தேவைப்படக் கூடும். எங்கள் இணையதளத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்து அறியக் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவது, நீங்கள் நிபந்தனையின்றி இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள் எனக் கருத்தில் கொள்ளப்படும். எங்கள் தனியுரிமைக் கொள்கையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக் கொள்வதோடு, டாடா மோட்டார்ஸ் லிமிடெட் அதன் தனியுரிமைக் கொள்கையின்படி நீங்கள் வழங்கிய அனைத்துத் தகவல்களையும் பயன்படுத்த தானாக முன்வந்து ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்த இணையதளம் அணுகப்பட வேண்டும் மற்றும் எங்கள் தனியுரிமைக் கொள்கையின் விதிமுறைகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால் அல்லது வலைத்தளங்கள் மற்றும் / அல்லது அதன் உள்ளடக்கங்கள் தொடர்பாக ஏதேனும் காரணத்திற்காக அதிருப்தி அடைந்தால், நீங்கள் இணையதளத்தைத் தொடர்ந்து அணுகுவது தடைசெய்யப்படுகிறது.

இந்தத் தனியுரிமைக் கொள்கையை முழுவதுமாகப் படித்து அறிய உங்களை ஊக்குவிக்கிறோம்.

நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தரவுகள்

நீங்கள் யார் மற்றும் உங்களை அடையாளம் காண, தொடர்பு கொள்ள அல்லது இருப்பிடம்காணப் பயன்படும் (எ.கா. பெயர், வயது, பாலினம், அஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி) TML அறிய அனுமதிக்கும் விவரங்கள் தனிப்பட்ட தரவுகள் எனக் கருதப்படும். கருத்துக்கணிப்புக்குப் பதிலளிக்கும் போது, ​​நிகழ்வுகளுக்குப் பதிவுசெய்யும்போது, ​​தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளுக்குப் பதிவுசெய்யும்போது, ​​தயாரிப்பு பற்றிய தகவலைக் கோரும்போது அல்லது எங்கள் சேவைகளைப் பயன்படுத்துதல் அல்லது வாடிக்கையாளர் ஆதரவைக் கோருதல் போன்ற சூழ்நிலைகளில் நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவைச் சேகரிக்கிறோம். உங்கள் பெயர், முகவரி, அஞ்சல் குறியீடு, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, IP முகவரி, இருப்பிடத் தரவு, உங்கள் சாதனத்தைப் பற்றிய தகவல் போன்ற சூழ்நிலைகளுக்குத் தொடர்புடைய உங்கள் தனிப்பட்ட தரவை வழங்குமாறு நாங்கள் உங்களைக் கோரலாம். TML உங்களைப் பற்றிக் கொண்டுள்ள தனிப்பட்ட தரவு அனைத்தும் உங்களிடமிருந்து நேரடியாகப் பெற்றதாக இருக்கவேண்டிய அவசியமில்லை. எடுத்துக்காட்டாக, அவை உங்கள் பணி அமர்த்துனர் அல்லது நீங்கள் சார்ந்த பிற நிறுவனங்களிடமிருந்தும் வரக் கூடும். இருப்பினும், இத்தளத்தை நீங்கள் தொடர்பு கொள்ளும்போது மற்றும்/அல்லது இத் தளத்தில் வழங்கப்படும் சேவைகளைப் பயன்படுத்தும் போது உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவை TML சேகரிக்கிறது. உதாரணமாக:

  • இந்தத் தளத்தின் வாயிலாக நீங்கள் வேலை அல்லது பிற பணி வாய்ப்புக்காக விண்ணப்பித்தால், உங்கள் பணி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்படி கேட்கப்படுவீர்கள், அத்துடன் உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் அஞ்சல் முகவரி போன்ற பிற தொடர்புத் தகவல்களையும் சமர்ப்பிக்கும்படி கேட்கப்படுவீர்கள். நீங்கள் விண்ணப்பித்துள்ள வேலை வாய்ப்பு சார்ந்து பரிசீலிக்க இத்தகவலை நாங்கள் பயன்படுத்துவோம். இத்தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள மற்ற பணிநிலை வாய்ப்புகளுக்குமென ,இருவித வேலை வாய்ப்புகள் சார்ந்தும் உங்களைத் தொடர்புகொள்ள இத்தகவலைப் பயன்படுத்துவோம்.
  • எங்கள் தளத்தின் சில அம்சங்களில் எங்களுக்கு உதவ மூன்றாம் தரப்பு சேவை வழங்குநரை நாங்கள் பயன்படுத்தக் கூடும். அந்நிலையில், எங்கள் சார்பாக எங்கள் சேவை வழங்குநர் உங்கள் தகவலைப் பெறுவார்கள் மற்றும் இதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் அதைப் பயன்படுத்த அவர்களுக்கு அனுமதி இல்லை.
  • நீங்கள் கருத்துக்கணிப்புக்கு பதிலளித்தல் மற்றும் இத்தளத்தில் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக அல்லது ஏதேனும் சிக்கல் சார்ந்து புகாரளித்தல் உட்பட நீங்கள் இணையதளத்துடன் மேற்கொள்ளும் பிற தொடர்புகள் சார்ந்து உங்கள் தனிப்பட்ட தரவைக் கோர வாய்ப்புள்ளது
  • டீலர்ஷிப் / டிஸ்ட்ரிபியூட்டர்ஷிப் (டீலர் / டிஸ்ட்ரிபியூட்டர் அப்ளிகேஷன்கள் மூலம்) எங்களுடன் வணிகம் செய்ய விரும்பும் நிலையில் உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரிக்கிறோம்.
  • விருப்பத்துக்கு உரியதாக இருக்கும் என நாங்கள் கருதும் சேவைகளை வழங்கவும், தரவு துல்லியத்தைப் பராமரிக்கவும், சேவைகளை வழங்கவும் மற்றும் மேம்படுத்தவும் எங்களுக்கு உதவ எங்கள் கூட்டாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் பொதுவில் கிடைக்கு,ம் வலைத்தளங்கள் போன்ற மூன்றாம் தரப்பினரிடமிருந்தும் தனிப்பட்ட தரவுகளை நாங்கள் சேகரிக்கிறோம்.
  • கிரெடிட்/டெபிட் கார்டு விவரங்கள், வங்கிக் கணக்கு எண், வங்கிக் கணக்கு வகை, வங்கிப் பெயர்கள் போன்ற பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்கள் எங்களுடன் இணைந்து செயலாற்றும் கட்டண நுழைவாயில்களால் சேகரிக்கப்படலாம். அத்தகைய தரவு உங்கள் பரிவர்த்தனைகளைச் செயலாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
  • மாடல், ஆண்டு, நிறம், RTO பதிவு எண் உள்ளிட்ட வாகன விவரங்கள் மற்றும் விலைப்பட்டியல் விவரங்கள், உத்தரவாத விவரங்கள், டீலர் பெயர் மற்றும் வாங்கிய ஆண்டு ஆகியவற்றை உள்ளடக்கிய விற்பனை விவரங்கள்.
  • எங்கள் வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றிய விவரங்கள்.
  • கேச்கள், சிஸ்டம் செயல்பாடு, ஹார்டுவேர் செட்டிங்குகள், பிரவுசர் வகை, பிரவுசர் மொழி, நீங்கள் வருகை தந்த தேதி மற்றும் நேரம், அப்பக்கங்களில் நீங்கள் செலவழித்த நேரம் மற்றும் பிற புள்ளிவிவரங்கள் மற்றும் பரிந்துரை URL போன்ற சாதன நிகழ்வுத் தகவல்கள்.

இந்தத் தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக/பயன்பாட்டிற்காக உங்களின் உறவினர்கள், நண்பர்கள் அல்லது பிற மூன்றாம் தரப்பினர் தொடர்பான உங்களின் தனிப்பட்ட தரவை எங்களுக்கு வழங்குவதன் மூலம், அத்தகைய தனிப்பட்ட தரவை எங்களிடம் வெளியிடுவதற்கு முன்பு, அத்தகைய உறவினர்கள், நண்பர்கள் அல்லது மூன்றாம் தரப்பினரிடமிருந்து தகுந்த சம்மதத்தைப் பெற்றுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தி உத்தரவாதம் அளிக்கிறீர்கள்.

எங்கள் தனியுரிமைக் கொள்கையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக் கொள்வதோடு, டாடா மோட்டார்ஸ் லிமிடெட் அதன் தனியுரிமைக் கொள்கையின்படி நீங்கள் வழங்கிய அனைத்துத் தகவல்களையும் பயன்படுத்த தானாக முன்வந்து ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்த இணையதளம் அணுகப்பட வேண்டும் மற்றும் எங்கள் தனியுரிமைக் கொள்கையின் விதிமுறைகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால் அல்லது வலைத்தளங்கள் மற்றும் / அல்லது அதன் உள்ளடக்கங்கள் தொடர்பாக ஏதேனும் காரணத்திற்காக அதிருப்தி அடைந்தால், நீங்கள் இணையதளத்தைத் தொடர்ந்து அணுகுவது தடைசெய்யப்படுகிறது.

சமூக கலந்துரையாடல் போர்டுகள்

ஆன்லைன் கம்யூனிட்டி டிஸ்கஷன் போர்டுகள், வலைப்பூக்கள் அல்லது பிற வழிமுறைகள் மூலம் பயனர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் வசதியை எங்கள் இணையதளம் வழங்குகிறது. அத்தகைய டிஸ்கஷன் போர்டுகளில் இடுகையிடப்படுவதை நாங்கள் வடிகட்டவோ கண்காணிக்கவோ மாட்டோம். இவ்வித டிஸ்கஷன் போர்டுகளில் இடுகையிட நீங்கள் தேர்வுசெய்தால், நீங்கள் வழங்கும் தனிப்பட்ட தரவுகள் எங்கள் தனியுரிமைக் கொள்கையால் பாதுகாக்கப்படவில்லை என்பதால் எந்தவொரு தனிப்பட்ட விவரங்களையும் வெளிப்படுத்துகையில் நீங்கள் கவனம் பராமரிக்க வேண்டும், அத்தகைய இடுகைகள் மூலம் உங்கள் தனிப்பட்ட விவரங்களை வெளியிட நீங்கள் தேர்வுசெய்தால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். மேலும், எங்கள் இணையதளத்தில் நீங்கள் வெளியிடும் தனிப்பட்ட விவரங்கள் இணையம் மூலம் உலகம் முழுவதும் கிடைக்கலாம். இதுபோன்ற தகவல்களை மற்றவர்கள் பயன்படுத்துவதையோ அல்லது தவறாகப் பயன்படுத்துவதையோ எங்களால் தடுக்க முடியாது.

TML இணையதளங்கள் மற்ற இணையதளங்களுக்கான இணைப்புகளைக் கொண்டிருக்கக் கூடும். பின்வரும் நிலையிலும், அத்தகைய இணையதளங்களின் தனியுரிமை அல்லது உள்ளடக்கத்திற்கு TML பொறுப்பாகாது:

  • எங்கள் இணையதளத்தில் உள்ள இணைப்புகளைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பு இணையதளத்தை அணுகியுள்ளீர்கள்; அல்லது
  • மூன்றாம் தரப்பு இணையதளத்தில் இருந்து எங்கள் இணையதளத்துடன் இணைத்துள்ளீர்கள்.

உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்

உரிய காரணம் இருந்தால் மட்டுமே உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பயன்படுத்த முடியும். பின்வருவனவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களுக்காக மட்டுமே உங்கள் தரவை நாங்கள் பயன்படுத்துகிறோம்:

  • உங்களுடன் நாங்கள் கொண்டுள்ள ஒப்பந்தத்தை நிறைவேற்ற, அல்லது
  • ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக உங்கள் தரவைப் பயன்படுத்த வேண்டிய சட்டப்பூர்வ கடமை எங்களுக்கு இருந்தால், அல்லது
  • அதைப் பயன்படுத்த உங்கள் சம்மதத்தைப் பெறும்போது, ​​அல்லது
  • எங்கள் தொழில் அல்லது வணிகக் காரணங்களுக்காக உங்கள் தரவைப் பயன்படுத்துவதற்கான நியாயமான காரணங்கள் இருக்கும் போது.​​அந்நிலையிலும், உங்கள் நலனை மீறி நியாயமற்ற முறையில் உபயோகப்படுத்தமாட்டோம்.

உங்கள் தகவலின் பயன்பாடு, நாங்கள் பயன்படுத்தும் நேரத்தில் நடைமுறையிலுள்ள தனியுரிமை அறிவிப்புக்கு உட்பட்டது. எங்கள் பொதுவான வணிக பயன்பாட்டிற்காக எங்களுக்கு வழங்கப்பட்ட தகவலையே TML பயன்படுத்துகிறது. இது பின்வரும் நோக்கங்களை உள்ளடக்கியிருக்கலாம்:

  • உங்கள் கோரிக்கைகளுக்குப் பதில் வழங்க;
  • வாடிக்கையாளர் சேவை வினாக்கள் உட்பட சேவைகள் வழங்க;
  • எங்கள் அல்லது எங்கள் துணை நிறுவனங்களின் தற்போதைய சேவைகள், புதிய சேவைகள் அல்லது நாங்கள் உருவாக்கி வரும் விளம்பரங்கள் மற்றும் உங்களுக்கான வாய்ப்புகள் பற்றிய தகவல்தொடர்புகளை உங்களுக்கு அனுப்ப;
  • எங்கள் சேவைகளுக்கான புதிய அம்சங்கள் அல்லது மேம்பாடுகள் குறித்து உங்களுக்கு விழிப்பூட்டல் தர;
  • நீங்கள் விசாரணை செய்த வேலை அல்லது தொழில் வாய்ப்புகள் சார்ந்து உங்களுடன் தொடர்பு கொள்ள;
  • எங்கள் தளம் மற்றும் சேவைகள் உங்களுக்குப் பயனுள்ள வகையில் செயல்படுவதை உறுதிசெய்ய;
  • விளம்பரம் மற்றும் அது எட்டிய அளவின் செயல்திறனை அளவிட அல்லது புரிந்து கொள்ள.
  • இணையதளங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் மாற்றங்கள், பயனர் ஒப்பந்தங்கள் மற்றும் கொள்கைகள் மற்றும்/ அல்லது பிற நிர்வாகத் தகவல்கள் தொடர்பான முக்கியமான தகவல்களை உங்களுக்கு அனுப்ப.
  • சந்தைப்படுத்தல் மற்றும் நிகழ்வுகள்: மின்னஞ்சல், தொலைபேசி, குறுஞ்செய்தி, நேரடி அஞ்சல் மற்றும் ஆன்லைன் போன்ற பல்வேறு தளங்களின் மூலம் சந்தைப்படுத்தல் மற்றும் நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை உங்களுக்கு வழங்க தனிப்பட்ட தகவலை நாங்கள் பயன்படுத்துகிறோம். நாங்கள் உங்களுக்கு அனுப்பும் மார்க்கெட்டிங் மின்னஞ்சல், எதிர்காலத்தில் இந்த மின்னஞ்சல்களைப் பெறுவதிலிருந்து விலகுவது எப்படி என்பது குறித்த வழிமுறைகளை உள்ளடக்கும். உங்களின் தகவல் மற்றும் சந்தைப்படுத்தல் விருப்பங்களை நிர்வகிப்பதற்கு மின்னஞ்சல் விருப்பத்தேர்வு மையங்களையும் நாங்கள் பராமரிக்கிறோம். மார்க்கெட்டிங் சார்ந்த மின்னஞ்சல்களைப் பெறுவதில் இருந்து நீங்கள் விலகினாலும், உங்கள் கணக்கு மற்றும் சந்தாக்கள் தொடர்பான முக்கியமான சேவைத் தகவலை நாங்கள் உங்களுக்குத் தொடர்ந்து அனுப்ப வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.
  • சாத்தியமான மீறல்களை விசாரிக்க அல்லது TML மற்றும் எங்கள் வலைத்தளத்தின் பயனர்களின் உரிமைகள், சொத்து அல்லது பாதுகாப்பைப் பராமரிக்க.
  • சட்டப்பூர்வ கடமைகள்: குற்றம் நடப்பதைத் தடுத்தல், கண்டறிதல் அல்லது குற்ற விசாரணை, இழப்பு தவிர்ப்பு அல்லது மோசடி போன்ற சட்ட மற்றும் இணக்கக் காரணங்களுக்காக தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்தவும் தக்கவைக்கவும் அவசியம் ஏற்படக்கூடும்; எங்கள் உள் மற்றும் வெளிப்புற தணிக்கைத் தேவைகள், தகவல் பாதுகாப்பு நோக்கங்கள் மற்றும் அவசியமான அல்லது பொருத்தமானது என நாங்கள் நம்பும் வகையிலானவைக்கு உங்கள் தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்துவோம்:
  • பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ், நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு அப்பால் உள்ள சட்டங்கள் இதில் அடங்கும்;
  • நீதிமன்றங்கள், சட்ட அமலாக்க ஏஜென்சி, ஒழுங்குமுறை ஏஜென்சி மற்றும் நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு வெளியே உள்ள அமைப்புகளை உள்ளடக்கிய பிற பொது நிர்வாகம் மற்றும் அரசு அதிகார அமைப்புகள் மூலம் எழும் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பது.

உங்களுக்கான சேவைகளை வழங்க அல்லது உங்கள் வினாக்களுக்குப் பதிலளிப்பதற்குத் தேவையான, நியாயமான, அவசியமான தகவல்களை மட்டுமே சேகரிக்க நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் வழங்கும் தகவல் துல்லியமானது, முழுமையானது மற்றும் தற்போதையது என்பதை உறுதிப்படுத்த நீங்கள் பொறுப்பேர்க்கிறீர்கள்.

எங்கள் இணையதளம், மொபைல் அப்ளிகேஷன் அல்லது வேறு ஏதேனும் முறையில் உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வழங்குவதன் மூலம், மின்னஞ்சல், SMS, தொலைபேசி அழைப்பு மற்றும்/ அல்லது வாட்ஸ்அப் மூலம் TML அல்லது அதன் கூட்டு/இணை நிறுவனங்களிடமிருந்து தகவல்தொடர்புகளைப் பெற ஒப்புக்கொள்கிறீர்கள்.

TML இணையதளத்தின் முழு அல்லது எந்தப் பகுதிக்கும் மற்றும் தொடர்புடைய சேவைகள் அல்லது அதன் எந்தப் பகுதிக்கும் எந்த நேரத்திலும் எவ்வித அறிவிப்புமின்றி உங்கள் அணுகலை நிறுத்துவதற்கான உரிமையை TML கொண்டுள்ளது.

எப்போது, ​​நாங்கள் தனிப்பட்ட தரவைப் பகிர்ந்து கொள்கிறோம்

சேவைகளை வழங்க அல்லது எங்கள் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள அவசியப்படும் தருணங்களில் TML உங்களது தனிப்பட்ட தரவைப் பகிர்ந்து கொள்கிறது அல்லது வெளிப்படுத்துகிறது. TML உங்கள் தனிப்பட்ட தரவை வெளியில் வழங்க விரும்பினால், உங்கள் தனியுரிமை உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை TML மேற்கொள்ளும் மற்றும் போதுமான பாதுகாப்புகள் உள்ளதையும் உறுதிசெய்யும். உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவுகளின் எந்த சிறப்பு வகைகளையும் நாங்கள் சேகரிப்பதில்லை (இதில் உங்கள் இனம் அல்லது இனம், மதம் அல்லது தத்துவ நம்பிக்கைகள், பாலியல் வாழ்க்கை, பாலியல் சார்பு, அரசியல் கருத்துக்கள், தொழிற்சங்க உறுப்பினர், உங்கள் உடல்நலம் மற்றும் மரபணு மற்றும் பயோமெட்ரிக் தரவு பற்றிய விவரங்கள் அடங்கும்) . குற்றவியல் தண்டனைகள் மற்றும் குற்றங்கள் பற்றிய தகவலையும் நாங்கள் சேகரிப்பதில்லை.

இந்தத் தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட பணி வாய்ப்புகளுக்கான உங்கள் விண்ணப்பம் அல்லது எங்கள் துணை நிறுவனங்களில் ஒன்றின் இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட வாய்ப்புகள் சார்ந்து, உங்கள் சம்மதத்துடன், TML இன் உறுப்பில்லாத மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர்களுக்கு உங்களைப் பற்றிய தகவலை TML வெளிப்படுத்தக் கூடும். உதாரணமாக -

TML க்குள்: உலகெங்கிலும் உள்ள எங்கள் வணிகங்கள், பல்வேறு TML குழுக்கள் மற்றும் செயல்பாடுகளால் ஆதரிக்கப்படுகின்றன. இவை வழங்கும் சேவைகள், கணக்கு நிர்வாகம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் வணிகம் மற்றும் தயாரிப்பு மேம்பாடு இவற்றிற்குத் தேவைப்பட்டால் தனிப்பட்ட தகவல்கள் அவர்களுக்கு வழங்கப்படும். எங்கள் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அனைவரும் தனிப்பட்ட தரவை கையாளும் போது எங்கள் தரவு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

துணை நிறுவனங்கள் எங்கள் தாய் நிறுவனம், துணை நிறுவனங்கள், கூட்டு அமைப்புகள், குழுமம் மற்றும் இணை நிறுவனங்கள். மேலே குறிப்பிட்டுள்ள நோக்கங்களுக்காக இந்நிறுவனங்கள் இத்தகவலைப் பயன்படுத்தலாம்.

டீலர்கள்: தற்சார்புடைய சொந்த டீலர்கள் மற்றும் எங்களால் இயக்கப்படும் எங்கள் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள். மார்க்கெட்டிங், வாடிக்கையாளர் சேவை, பூர்த்தி செய்தல் மற்றும் தொடர்புடைய நோக்கங்கள் உட்பட, தங்களின் அன்றாட வணிக நோக்கங்களுக்காக இந்தத் தகவலை அவர்கள் பயன்படுத்தலாம்.

விநியோகஸ்தர்கள்: தற்சார்புடைய சொந்த மற்றும் எங்களால் இயக்கப்படும் எங்கள் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள். மார்க்கெட்டிங், வாடிக்கையாளர் சேவை, பூர்த்தி செய்தல் மற்றும் தொடர்புடைய நோக்கங்கள் உட்பட, தங்களின் அன்றாட வணிக நோக்கங்களுக்காக இந்தத் தகவலை அவர்கள் பயன்படுத்தலாம்.

எங்கள் வணிகக் கூட்டாளர்கள்: கோ-பிராண்டட் சேவைகளை வழங்க, உள்ளடக்கத்தை வழங்க அல்லது நிகழ்வுகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த நாங்கள் தேவையானபோது பிற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவோம். இந்த ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, நீங்கள் TML மற்றும் எங்கள் கூட்டாளர்களின் வாடிக்கையாளர்களாக இருக்கக் கூடும் மற்றும் நாங்கள் உங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்துப் பகிர்ந்து கொள்ளக் கூடும். TMLஇன் தனியுரிமை கொள்கைக்கு ஏற்ப தனிப்பட்ட தரவுகள் கையாளப்படும்.

எங்கள் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள்:தேவையான ஆதரவு சரர்ந்து உலகெங்கிலும் உள்ள சேவை வழங்குநர்களுடன் நாங்கள் இணைந்து செயலாற்றுகிறோம். மென்பொருள், அமைப்பு மற்றும் இயங்குதள ஆதரவு; நேரடி சந்தைப்படுத்தல் சேவைகள்; கிளவுட் ஹோஸ்டிங் சேவைகள்; விளம்பரம்; மற்றும் ஆர்டர் பூர்த்தி மற்றும் விநியோகம் போன்ற சேவைகளை நிறைவேற்றுவதற்குத் தேவைப்படும் போது மட்டுமே இத்தரப்பினருக்கு உங்களது தனிப்பட்ட தரவு கிடைக்கக் கூடும்; எங்களுக்குச் சேவைகளை வழங்குவதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் நாங்கள் அவர்களுக்குக் கிடைக்கும் தனிப்பட்ட தரவைப் பகிரவோ பயன்படுத்தவோ எங்கள் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், உங்கள் தனிப்பட்ட விவரங்களைச் செயலாக்குவதை மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களிடம் நாங்கள் ஒப்படைக்க வேண்டி இருப்பின், பொருத்தமான அல்லது பொருத்தமான தொழில்நுட்ப மற்றும் இயற்பொருள் சார்ந்த பாதுகாப்புகளைப் பராமரிக்கக்கூடிய மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களைத் தேர்ந்தெடுப்போம் மற்றும் அத்தகைய மூன்றாம் தரப்பு சேவை வழங்குனர்களைக் கட்டுப்படுத்தி மேற்பார்வையிடுவோம். சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக நாங்கள் உங்கள் தனிப்பட்ட விவரங்களை மூன்றாம் தரப்பினருக்கு விற்கவோ அல்லது வாடகைக்கு விட மாட்டோம். இருப்பினும், தரவு ஒருங்கிணைப்பு நோக்கங்களுக்காக நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தலாம், இது எங்கள் விருப்பப்படி மற்ற தரப்பினருக்கு விற்கப்படலாம். அத்தகைய தரவு திரட்டல் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் எதையும் கொண்டிருக்காது. உங்கள் முதல் பெயர், கடைசி பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், தெரு முகவரி, நகரம், மாநிலம், மாகாணம், குக்கீகள் மற்றும் IP முகவரி போன்ற "சிறப்புக் கவனிப்பு தேவைப்படும் தனிப்பட்ட தகவல்" தவிர மேலே கூறப்பட்ட தரவைச் சேகரிக்கும் நோக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி உங்கள் தனிப்பட்ட விவரங்களை எங்களுக்குச் சேவைகளை வழங்க நாங்கள் பணியமர்த்தியுள்ள மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுக்கு உங்கள் அனுமதியின்றி மின்னஞ்சல்கள், இணையம் போன்றவற்றின் மூலம் நாங்கள் வழங்கக் கூடும். இந்த மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களில் உள்ளடங்கியவை ஆனால் அவை மட்டும் அல்ல: பேமெண்ட் பிராஸசர்கள், கால் சென்ட்டர்கள், தரவு மேலாண்மை சேவைகள், ஹெல்ப் டெஸ்க் சேவை வழங்குநர்கள், கணக்காளர்கள், சட்ட நிறுவனங்கள், தணிக்கையாளர்கள், ஷாப்பிங் கார்ட்டுகள் மற்றும் மின்னஞ்சல் சேவை வழங்குநர்கள் மற்றும் ஷிப்பிங் நிறுவனங்கள். அத்தகைய மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுக்கு உங்கள் தனிப்பட்ட தரவை வழங்குவது தொடர்பாக உரிய அல்லது பொருத்தமான தொழில்நுட்ப மற்றும் இயற்பொருள் சார்ந்த பாதுகாப்புகளை நாங்கள் பராமரிக்கிறோம். அத்தகைய மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுக்கு உங்கள் தனிப்பட்ட தரவை வழங்குவதை நிறுத்துமாறு நீங்கள் எங்களிடம் கோரினால், அத்தகைய மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுக்கு உங்கள் தனிப்பட்ட தரவை வழங்குவதை நாங்கள் நிறுத்துவோம். நாங்கள் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு குறித்த நகலை நீங்கள் பெற விரும்பினால் அல்லது மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுக்கு உங்கள் தனிப்பட்ட விவரங்களை வழங்குவதை நிறுத்த விரும்பினால், உங்கள் கோரிக்கையை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். எந்தவொரு மூன்றாம் தரப்பு சேவை வழங்குனர்களுக்கும் உங்களின் தனிப்பட்ட விவரங்களை வழங்கும்போதோ மூன்றாம் தரப்பினரிடமிருந்து தனிப்பட்ட விவரங்களைப் பெறும்போதோ ​​அத்தகைய ஏற்பாடு குறித்து பதிவு செய்கிறோம் அல்லது அதற்கான ஒப்புகையைப் பதிவு செய்கிறோம். மேலும், எந்தவொரு மூன்றாம் தரப்பினரிடமிருந்தும் தனிப்பட்ட விவரங்களைப் பெறும்போது, ​​அத்தகைய தனிப்பட்ட விவரங்களைப் பெறுவதற்கான சூழ்நிலைகளைச் சோதித்த பிறகே பெறுகிறோம்.

சட்டப்பூர்வ காரணங்களுக்காக மூன்றாம் தரப்பினர் பின்வருவனவற்றிற்காக அவை அவசியம் என நாங்கள் கருதினால் தனிப்பட்ட தரவை நாங்கள் பகிர்வோம்,

  • நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு அப்பால் உள்ள அத்தகைய அதிகார அமைப்புகளை உள்ளடக்கிய சட்ட அமலாக்க மற்றும் பிற பொது அதிகார அமைப்புகள் உட்பட, சட்டப்பூர்வ கடமைகளுக்கு இணங்க மற்றும் அரசாங்க நிறுவனங்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க.
  • இணைப்பு, விற்பனை, மறுகட்டமைப்பு, கையகப்படுத்தல், கூட்டு முயற்சி, உரிமை மாற்றல், பரிமாற்றம் அல்லது எங்கள் வணிகம், சொத்துக்கள் அல்லது பங்குகளின் அனைத்து அல்லது ஏதேனும் பகுதியின் உரிமையளிப்பு (எந்தவொரு திவால் அல்லது அது போன்ற நடவடிக்கைகள் உட்பட)
  • எங்கள் உரிமைகள், பயனர்கள், அமைப்புகள் மற்றும் சேவைகளைப் பாதுகாக்க.

 

தனிப்பட்ட தரவை எங்கே சேமித்து செயலாக்குகிறோம்

உலகளாவிய அமைப்பாக இயங்கும் TML, தரவு எங்கிருப்பினும் நாங்கள் சேகரிக்கும் தகவல், இத்தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டத்தின் தேவைகளின்படி செயலாக்கப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கை மேற்கொள்கிறோம். TML உலகெங்கிலும் நெட்வொர்க்குகள், தரவுத்தளங்கள், சர்வர்கள், அமைப்புகள், ஆதரவுத் துறை மற்றும் ஹெல்ப் டெஸ்க்க்குகளைக் கொண்டுள்ளது. எங்கள் வணிகம், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டி உலகெங்கிலும் கிளவுட் ஹோஸ்டிங் சேவைகள், சப்ளையர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு போன்ற மூன்றாம் தரப்பினருடன் நாங்கள் இணைந்து செயலாற்றுகிறோம். பொருந்தக்கூடிய சட்டத்தின்படி தனிப்பட்ட தரவுகள் செயல்படுத்தப்படுவதையும், பாதுகாக்கப்படுவதையும், பரிமாற்றப்படுவதையும் உறுதிசெய்ய தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.

TML உங்கள் தனிப்பட்ட தரவை யாருக்கும் விற்காது அல்லது வாடகைக்குக் கொடுக்காது. நீங்கள் கோரிய தயாரிப்பு அல்லது சேவையை வழங்குவது சார்ந்து, சில சந்தர்ப்பங்களில், தேவைப்பட்டால், உங்கள் தனிப்பட்ட தரவை TML க்குள் அல்லது மூன்றாம் தரப்பினருக்கு வெளியிட வேண்டியிருக்கலாம். உங்கள் சொந்த நாட்டில் உள்ள அதே அளவிலான தரவு தனியுரிமைப் பாதுகாப்பை சார்ந்து பொருந்தக்கூடிய சட்டங்களை வழங்காத பிற நாடுகளுக்குத் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் வழங்க நேரிட்டால், ​​பொருத்தமான அளவிலான தரவுத் தனியுரிமைப் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுப்போம். எடுத்துக்காட்டாக, அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்த விதிகள், பலதரப்புத் தரவு பரிமாற்ற ஒப்பந்தங்கள், உள்குழு ஒப்பந்தங்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் போன்று உங்கள் தனிப்பட்ட தகவலைப் பெறுபவர்கள் அதைப் பாதுகாப்பதை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்கிறோம்.

தனிப்பட்ட தரவை நாங்கள் எவ்வாறு பாதுகாக்கிறோம்

உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்கப் பொருத்தமான தொழில்நுட்பங்களையும் நடைமுறைகளையும் TML பயன்படுத்துகிறது. எங்கள் தகவல் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச தரங்களுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன மற்றும் அவை எங்கள் வணிகத் தேவைகள், தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது சார்ந்து தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படுகின்றன. உதாரணமாக,

  • கொள்கைகள் மற்றும் நடைமுறைகள்: இழப்பு, தவறான பயன்பாடு, மாற்றம் அல்லது தற்செயலாக அழிப்பதில் இருந்து உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் நியாயமான தொழில்நுட்ப, இயற்பொருள் சார்ந்த மற்றும் செயலாக்கப் பாதுகாப்பு நடைமுறைகளை TML பயன்படுத்துகிறது. உங்களைப் பற்றிச் சேகரிக்கப்படும் அனைத்துத் தரவுகளுக்கும் பொருத்தமான பாதுகாப்பை வழங்கும் முயற்சியாக எங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படும்.
  • உங்கள் தனிப்பட்ட தரவை அணுகுவதற்குத் தேவையான கட்டுப்பாடுகளை நாணல் விதித்துள்ளோம்.
  • தரவைப் பாதுகாப்பாகச் சேமித்து இடமாற்றம் செய்வதற்கு, கண்காணிப்பு மற்றும் இயற்பொருள் சார்ந்த நடவடிக்கைகள் உள்ளிட்ட பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நாங்கள் செயல்படுத்துகிறோம்
  • தனிப்பட்ட தரவை அணுகக்கூடிய எங்கள் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு தனியுரிமை, தகவல் பாதுகாப்பு மற்றும் பொருந்தக்கூடிய பிற பயிற்சிகள் பெருவது அவசியத் தேவையாகும்.
  • எங்கள் தகவல் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய ஒப்பந்த நிபந்தனைகளின்படி எங்கள் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் செயல்படுவதை உறுதிசெய்ய நாங்கள் உகந்த நடவடிக்கை மேற்கொள்கிறோம்.
  • ஒப்பந்தங்கள் மற்றும் பாதுகாப்பு மதிப்பாய்வுகளுக்குக் கூடுதலாக, எங்கள் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்க எங்கள் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் மற்றும் வழங்குநர்கள் அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட எந்தவொரு தனிப்பட்ட தரவையும் பாதுகாக்க வேண்டியது அவசியத் தேவையாகும்.

குக்கிகள்

தேவைப்படும்போது, ​​நாங்கள் “குக்கீ” எனப்படும் பொதுவான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடும். குக்கீ என்பது கணினி அல்லது பிற சாதனத்தில் வைக்கப்படும் ஒரு சிறிய உரைக் கோப்பாகும், மேலும் இது பயனரை அல்லது சாதனத்தை அடையாளம் காணவும் தகவல்களைச் சேகரிக்கவும் பயன்படுகிறது. குக்கீகள் அவற்றின் செயல்பாடு மற்றும் நோக்கத்தைப் பொறுத்து பொதுவாக நான்கு வகைகளில் ஏதேனும் ஒரு வகையில் அமைக்கப்படுகின்றன: தேவையான குக்கீகள், செயல்திறன் சார்ந்த குக்கீகள், செயல்பாட்டு குக்கீகள் மற்றும் சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்கான குக்கீகள். குக்கியால் உங்கள் ஹார்ட்டிரைவில் இருந்து வேறு எந்தத் தரவையும் மீட்டெடுக்க முடியாது, கணினி வைரஸ்களை அனுப்ப முடியாது அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பெற முடியாது. தற்போது, ​​ பயனரின் வருகையை மேம்படுத்தும் நோக்கில் இணையதளங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகின்றன; பொதுவாக, குக்கீகள் பயனரின் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கலாம், முகப்புப் பக்கங்களைத் தனிப்பயனாக்கலாம் மற்றும் தளத்தின் எந்தப் பகுதிகளுக்குச் சென்றீர்கள் என்பதைக் கண்டறியலாம். குக்கீ எப்போது சேமிக்கப்படுகிறது என்பதை உங்கள் பிரவுசர் செட்டிங் மூலம் நீங்கள் கட்டுப்படுத்தலாம். இந்த வழியில் குக்கீயை ஏற்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கு வாய்ப்பு கிட்டும். எங்கள் பார்வையாளர்கள் இந்த இணையதளத்தை எப்போது, எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல், தொடர்ந்து எங்கள் தளத்தை மேம்படுத்த உதவும். நீங்கள் எங்களுக்குக் கூடுதல் தகவல்களைத் தராதவரை, குக்கீகள் உங்களைப் பற்றி தனிப்பட்ட விஷயங்களை எங்களுக்கு வழங்காது. எங்களால் அல்லது மூன்றாம் தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய எந்தவொரு தகவலுடனும் குக்கீ தகவலை TML இணைக்கவில்லை.

நாங்கள் குக்கீகளை பின்வருவனவற்றிர்க்குப் பயன்படுத்தக் கூடும்: (i) இணையதளத்திற்கு உங்கள் வருகைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட; (ii) இணையதளப் பயன்பாட்டு சார்ந்து அநாமதேய, மொத்த, புள்ளிவிவரத் தகவல்களைப் பெற; (iii) உங்கள் தேவை அல்லது பார்வை வரலாற்றின் படி பொருத்தமான உள்ளடக்கத்தை வழங்க; மற்றும் (iv) நீங்கள் எங்கள் தளங்களுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் கடவுச் சொல்லை மீண்டும் மீண்டும் உள்ளிடுவதைத் தவிர்க்க அவற்றைச் சேமிக்க (அவ்வாறு செய்ய அனுமதித்தால் மட்டுமே). வேண்டுமெனில் நீங்கள் குக்கீகளை முடக்கலாம். உங்கள் பிரவுசர் தேர்வுகளை மாற்றுவதன் மூலம், நீங்கள் அனைத்து குக்கீகளையும் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம் அல்லது குக்கீ அமைக்கப்படும் போது அறிவிக்கக் கோரலாம்.

அவசியமான குக்கிகள்

உள்ளடக்கத்தைக் காண்பித்தல், உள்நுழைதல், உங்கள் அமர்வைச் சரிபார்த்தல், சேவைகளுக்கான உங்கள் கோரிக்கைக்கு பதிலளித்தல் மற்றும் பிற செயல்பாடுகள் போன்ற இணையதளத்தின் முறையான செயல்பாட்டிற்கு குக்கீகள் அவசியமானது. பெரும்பாலான பிரவுசர்களில் குக்கீகளின் பயன்பாட்டை முடக்கும் வகையில் அமைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், குக்கீகளை நீங்கள் முடக்கினால், எங்கள் இணையதளத்தில் உள்ள அம்சங்களை நீங்கள் சரியாக அல்லது முழுமையாக அணுக முடியாமல் போகலாம்.

சிறார்கள்

நாங்கள் சிறார்களுக்கு நேரடியாக எவ்வித சேவைகளையும் வழங்குவதில்லை அல்லது அவர்களின் தனிப்பட்ட தகவல்களை முன்கூட்டியே சேகரிப்பதில்லை. எவ்வித வரம்புமின்றி, TML தளத்தைப் பயன்படுத்துவதைக் கண்காணித்தல் உட்பட, குழந்தையின் நடத்தைக்கான அனைத்துப் பொறுப்பு மற்றும் சட்டப் பொறுப்புகளை பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில், குழந்தைகள் எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதை அவர்கள் அங்கீகரிக்கலாம்.

பெற்றோரின் உறுதி செய்யத்தக்க அனுமதியின்றி குழந்தையின் தனிப்பட்ட தரவு சேகரிக்கப்பட்டதாக TML அறிந்தால், அத்தகைய தகவலை நீக்குவதற்கு TML பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கக் கூடும். இருப்பினும், உங்கள் குழந்தை தனது தரவை TML க்கு சமர்ப்பித்துள்ளதை நீங்கள் கண்டறிந்தால், மின்னஞ்சல் கோரிக்கையை அனுப்புவதன் மூலம் TML இன் தரவுத்தளத்திலிருந்து அத்தகைய தரவை நீக்குமாறு நீங்கள் கோரலாம். கோரிக்கையைப் பெற்றவுடன், TML அதன் தரவுத்தளத்திலிருந்து அத்தகைய தகவலை நீக்குவதை உறுதி செய்யும்.

உங்கள் உரிமைகள் மற்றும் உங்கள் தனிப்பட்ட தரவு

உங்கள் தகவலை அணுகுவது மற்றும் கட்டுப்படுத்துவது சார்ந்து நீங்கள் கொண்டுள்ள உரிமையை நாங்கள் மதிக்கிறோம், மேலும் தகவலுக்கான கோரிக்கைகளுக்கு நாங்கள் பதிலளிப்போம் மற்றும் பொருந்தக்கூடிய இடங்களில் உங்கள் தனிப்பட்ட தகவலைச் சீர்செய்வோம், திருத்துவோம் அல்லது நீக்குவோம்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இந்த உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் அடையாளச் சான்ரை நீங்கள் வழங்க வேண்டியது அவசியமாகும்.

  • தகவலை அணுகுவதற்கான உரிமை: உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் தகவல், எங்களிடம் அந்தத் தகவல் ஏன் உள்ளது, அத் தகவலுக்கான அணுகல் எவருக்கு உள்ளது மற்றும் எங்கிருந்து தகவலைப் பெற்றோம் என்பது குறித்து எந்த நேரத்திலும் நீங்கள் எங்களைத் தொடர்புகொண்டு கோரலாம். உங்கள் கோரிக்கையைப் பெற்ற ஒரு மாதத்திற்குள் நாங்கள் அதற்குப் பதிலளிப்போம். முதல் கோரிக்கைக்குக் கட்டணம் ஏதுமில்லை ஆனால் அதே தரவுகளுக்கான கூடுதல் கோரிக்கைகள் இருப்பின் நிர்வாகக் கட்டணங்கள் விதிக்கப்பட வாய்ப்புண்டு. அணுகலைக் கோருவதற்கான காரணத்தை நீங்கள் வழங்க வேண்டியதில்லை என்றாலும், உங்கள் அடையாளத்தை உறுதி செய்ய சில நியாயமான ஆதாரங்களை வழங்க வேண்டியிருக்கும்.
  • தகவலைச் சரிசெய்தல் மற்றும் புதுப்பிப்பதற்கான உரிமை: நாங்கள் உங்களிடம் வைத்திருக்கும் தரவு காலாவதியானது, முழுமையடையாதது அல்லது தவறானது என அறிந்தால், நீங்கள் எங்களுக்குத் தெரிவிக்கலாம் மற்றும் உங்கள் தரவு புதுப்பிக்கப்படும்.
  • உங்கள் தகவலை அழிக்கும் உரிமை: நாங்கள் உங்களைப் பற்றிய தரவை இனி பயன்படுத்தக் கூடாது அல்லது உங்கள் தரவைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துகிறோம் என்று நீங்கள் நினைத்தால், அத்தரவை அழிக்குமாறு நீங்கள் கோரலாம். உங்கள் கோரிக்கையை நாங்கள் பெற்றதும், ​​தரவு நீக்கப்பட்டதா அல்லது இல்லையெனில் அதை நீக்க முடியாத காரணத்தை நாங்கள் உறுதி செய்வோம் (எடுத்துக்காட்டுக்கு, எங்களின் நியாயமான நலன்கள் அல்லது ஒழுங்குமுறை நோக்கங்களுக்காக இது தேவைப்படுகிறது).
  • செயலாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை: உங்கள் தரவைச் செயலாக்குவதை நிறுத்துமாறு கோர உங்களுக்கு உரிமை உள்ளது. கோரிக்கையைப் பெற்றவுடன், நாங்கள் உங்களைத் தொடர்புகொண்டு, எங்களால் அதற்கு இணங்க முடியுமா அல்லது உங்கள் தரவைத் தொடர்ந்து செயலாக்குவதற்கு எங்களிடம் நியாயமான காரணங்கள் உள்ளதா என்பதை உங்களுக்குத் தெரிவிப்போம். ஆட்சேபனைக்கான உங்கள் உரிமையைப் பயன்படுத்திய பிறகும், உங்களின் பிற உரிமைகளுக்கு இணங்க அல்லது சட்டப்பூர்வ உரிமைகோரல்களைக்காக அல்லது அதைப் பாதுகாக்க உங்கள் தரவை நாங்கள் தொடர்ந்து வைத்திருக்கலாம்.
  • டேட்டா போர்டபிளிட்டிக்கான உரிமை: உங்களின் சில தரவை வேறொரு கண்ட்ரோலருக்கு மாற்றுமாறு கோர உங்களுக்கு உரிமை உள்ளது. அதற்கான வாய்ப்பு இருந்தால், உங்கள் கோரிக்கையைப் பெற்ற ஒரு மாதத்திற்குள் நாங்கள் உங்கள் கோரிக்கைக்கு இணங்குவோம்.
  • எந்தவொரு செயலாக்கமும் சார்ந்து எந்த நேரத்திலும் உங்கள் ஒப்புதலை திரும்பப் பெறுவதற்கான உரிஒப்புதல் கோரப்பட்ட தரவுகளின்மை: தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் உங்கள் ஒப்புதலை எளிதாக உங்களால் திரும்பப் பெற இயலும் (ஒப்புதல் திரும்பப் பெறும் படிவத்தைப் பார்க்கவும்).
  • பொருந்தக்கூடிய தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதை எதிர்க்கும் உரிமை.
  • தரவுப் பாதுகாப்புப் பிரதிநிதியிடம் புகார் அளிக்கும் உரிமை
  • எந்த நேரத்திலும் எங்களைத் தொடர்புகொள்வதன் மூலம், உங்களுக்கு மார்க்கெட்டிங் செய்திகளை அனுப்புவதை நிறுத்துமாறு எங்களிடம் அல்லது மூன்றாம் தரப்பினரிடம் நீங்கள் கோரலாம். மார்க்கெட்டிங் செய்திகளைப் பெறுவதில் இருந்து நீங்கள் விலகுவது, தயாரிப்பு/சேவை வாங்குதல், உத்தரவாதம் பதிவு, தயாரிப்பு/சேவை அனுபவம் அல்லது பிற பரிவர்த்தனைகள் சார்ந்து எங்களுக்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட தரவுகளுக்குப் பொருந்தாது.
  • எங்களிடமிருந்து அல்லது எங்கள் துணை நிறுவனங்களிடமிருந்து மேற்கொண்டு மின்னஞ்சல் பெறுவதில் இருந்து நீங்கள் எப்போது வேண்டுமானாலும் விலகலாம். எங்கள் வணிகத்தின் விற்பனை அல்லது பரிமாற்றம் அல்லது எங்கள் நிறுவனம் திவால்நிலைக்குத் தாக்கல் செய்யும் நிலை தவிர, உங்கள் அனுமதியின்றி உங்கள் மின்னஞ்சல் முகவரியை எந்த இணைக்கப்படாத மூன்றாம் தரப்பினருக்கும் விற்கவோ, வாடகைக்கு வழங்கவோ அல்லது வர்த்தகம் செய்யவோ மாட்டோம்.

உங்கள் தனிப்பட்ட தரவை எவ்வளவு காலம் பராமரிப்போம்?

சட்டப்பூர்வ அல்லது வணிக நோக்கங்களுக்காக நியதிப்படி தேவைப்படும் வரை தனிப்பட்ட தகவல்கள் தக்கவைக்கப்படும். உள்ளூர் சட்டங்கள், ஒப்பந்தக் கடமைகள் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகள் ஆகியவற்றைப் பொறுத்து TML தரவு தக்கவைப்புக் காலத்தை நிர்ணயிக்கிறது. தனிப்பட்ட தகவல் தேவைப்படாதபோது, அவற்றைப் ​​பாதுகாப்பாக நீக்கிவிடுவோம் அல்லது அழித்து விடுவோம்.

மாறுதல்கள்

TML தனியுரிமைக் கொள்கையை அவ்வப்போது புதுப்பிக்கக் கூடும். தற்போது நடப்பிலுள்ள தனியுரிமைக் கொள்கையைக் கான எங்கள் இணையதளத்தை அவ்வப்போது பார்வையிட உங்களை ஊக்குவிக்கிறோம், இதன்மூலம் TML எவ்வாறு உங்கள் தகவலைப் பயன்படுத்துகிறது மற்றும் பாதுகாக்கிறது என்பதை நீங்கள் அறிய இயலும். இக்கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் நிலையில், அது குறித்து எங்கள் இணையதளத்தில் ஒரு முக்கிய அறிவிப்பையும், என்றிலிருந்து அது அமலுக்கு வருகிறது என்ற தகவலையும் வழங்குவோம்.

வழங்கப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு

எங்களுக்கு வழங்கப்பட்ட உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பது சார்ந்து கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ளன. அதன் இழப்பு, தவறாகப் பயன்படுத்துதல், தவறான வெளிப்பாடு, மாற்றம் அல்லது அழித்தல் ஆகியவற்றைத் தடுத்து அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கிறோம். குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் அவ்வப்போது புதுப்பிக்கப்படும். எவ்வாறாயினும், எதிர்பாராத இழப்பு, தவறான பயன்பாடு, மாற்றம் அல்லது அத்தகைய தகவலை வெளிப்படுத்துதல் ஆகியவை உட்பட இணைய பரிமாற்றத்தின் போது தனிப்பட்ட தகவல்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு மீறலுக்கு TML பொறுப்பேற்காது. மேலும், இந்தத் தனியுரிமைக் கொள்கை உள்ள போதிலும், அத்தகைய இழப்பு, சேதம் அல்லது தவறாகப் பயன்படுதுதல் ஆகியவை ஃபோர்ஸ் மஜ்யூரின் நிகழ்வு அல்லது உங்களுக்கு விளக்கப்படும் ஏதேனும் காரணத்தால் நிகழ்ந்தால், அந்த இழப்பு, சேதம் அல்லது தனிப்பட்ட தகவலை தவறாகப் பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு TML பொறுப்பேற்காது.

TML இன் சட்ட உரிமைகள் அல்லது அறிவுசார் சொத்துரிமைகளைக் காப்பாற்றவும் பாதுகாக்க வேண்டி, சட்டப்பூர்வ கடமைக்கு இணங்க அல்லது ஏதேனும் சட்டம் அல்லது ஏதேனும் தகுதிவாய்ந்த நீதிமன்றம் அல்லது சட்டப்பூர்வ அதிகாரத்தின் உத்தரவின் மூலம் வெளிப்படுத்தல் தேவைப்பட்டால் அல்லது நல்ல நம்பிக்கையில் TML யங்கள் தனிப்பட்ட தரவை வெளிப்படுத்தக் கூடும்.

உங்கள் கடமைகள்

இந்த பயன்பாட்டு விதிமுறைகளால் தடை செய்யப்பட்ட அல்லது சட்டவிரோதமான எந்தவொரு நோக்கத்திற்காகவும் எங்கள் இணையதளத்தைப் பயன்படுத்த மாட்டீர்கள் என்று நீங்கள் TML க்கு உத்தரவாதம் அளிக்கிறீர்கள். இந்த இணையதளத்தைச் சேதப்படுத்தவோ, முடக்கவோ, அதிக சுமையை ஏற்படுத்தவோ அல்லது பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது வேறு எந்த தரப்பினரின் இந்த இணையதளத்தின் பயன்பாட்டில் தலையிடவோ மற்றும் பொழுதுபோக்கிற்காகவோ எந்த வகையிலும் இந்த இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தக்கூடாது எங்கள் முன் அனுமதியின்றி நேரடியாகவோ, மறைமுகமாகவோ, TML இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட எந்தவொரு தரவையும், எந்த ஒரு ஊடகத்திலும் நீங்கள் மாற்றவோ, நகலெடுக்கவோ, விநியோகிக்கவோ, அனுப்பவோ, காட்சிப்படுத்தவோ, மீளாக்கம் செய்யவோ, வெளியிடவோ, உரிமம் வழங்கவோ, வழித்தோன்றல் படைப்புகளை உருவாக்கவோ, மாற்றவோ, விற்கவோ கூடாது. தனிப்பட்ட மற்றும் வணிகரீதி அற்ற பயன்பாட்டிற்குத் தவிர, இந்த மூலப் பொருட்கள் அல்லது அதன் எப் பகுதியும் கணினியில் சேமிக்கப்படக்கூடாது.

ஆளும் சட்டம்/ அதிகார வரம்பு

இந்தத் தனியுரிமைக் கொள்கையானது இந்திய சட்டங்களால் நிர்வகிக்கப்படும்; மற்றும் அதன் மீது எழும் எந்தவொரு சர்ச்சையையும் விசாரிக்க மும்பை நீதிமன்றங்கள் (இந்தியா) பிரத்யேக அதிகார வரம்பைக் கொண்டிருக்கும்.

கேள்விகள்/தொடர்புத் தகவல்

இந்தத் தனியுரிமை அறிவிப்புக் கொள்கை தொடர்பாக உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது கருத்துகள் இருந்தால், தயவுசெய்து எங்களை இங்கு தொடர்பு கொள்ளவும்:

மின்னஞ்சல்: [email protected]

நடைமுறைக்கு வரும் தேதி: 23.03.22